உலகளாவிய கண்காணிப்புக் குறியீடு - இந்தியாவில் தரவின் தனியுரிமை
October 18 , 2019 2118 days 638 0
இங்கிலாந்தில் உள்ள காம்பரிடெக் நிறுவனமானது 47 நாடுகளில் கண்காணிப்பின் தனியுரிமை மற்றும் அதன் நிலை குறித்து மதிப்பிட்டு, உலகளாவிய கண்காணிப்புக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
நாடுகள் பின்வருவனவற்றின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்புப் பாதுகாப்பு,
தனியுரிமை அமலாக்கம்,
பயோமெட்ரிக் தகவல்கள்,
தரவுப் பகிர்வு போன்றவை.
காம்பரிடெக்கின் உலகளாவிய கணக்கெடுப்பின் படி, உலகின் முதல் மூன்று கண்காணிப்பு நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
இந்தக் குறியீட்டில் நாட்டின் கண்காணிப்புக் கட்டமைப்பு என்று வரும்போது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவானது "தனியுரிமை பாதுகாப்புகளைப் பராமரிக்கும் முறையில் தோல்வி கொண்ட நாடு” என்று அழைக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், அயர்லாந்து, பிரான்சு, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.