2025 ஆம் ஆண்டு உலகளாவிய கல்வி அறிக்கையானது யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டது.
உலகளவில் 133 மில்லியன் பெண்கள் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
1995 ஆம் ஆண்டு பெய்ஜிங் பிரகடனத்திற்குப் பிறகு, 91 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் தொடக்கப் பள்ளியிலும், 136 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் படிக்கின்றனர்.
மத்திய மற்றும் தெற்காசியா இடைநிலைக் கல்வியில் பாலினச் சமத்துவத்தை அடைந்துள்ளன.
வறுமை, மோதல் மற்றும் கிராமப்புற தனிமை காரணமாக ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் ஓசியானியா ஆகியவை பின்தங்கியுள்ளன.
மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மட்டுமே முதன்மை மட்டத்தில் கட்டாயப் பாலியல் கல்வியை வழங்குகின்றன என்பதோடுபாடப் புத்தகங்கள் பெரும்பாலும் பாலினம் சார்ந்த சார்பு நிலையை வலுப்படுத்துகின்றன.
பெரும்பாலான ஆசிரியர்கள் பெண்களாக உள்ளனர், ஆனால் உலகளவில் உயர்கல்வி தலைமைப் பதவிகளில் 30% மட்டுமே பெண்கள் வகிக்கின்றனர்.