TNPSC Thervupettagam

உலகளாவிய குளிர்விப்பு முறையின் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை 2025

November 15 , 2025 13 hrs 0 min 14 0
  • 2025 ஆம் ஆண்டு உலகளாவிய குளிர்விப்பு முறையின் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அமைப்பின் குளிர்விப்பு முறைகள் கூட்டணி வெளியிட்டது.
  • இந்த அறிக்கை பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற 30வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP30) வெளியிடப்பட்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய குளிர்விப்புத் தேவையானது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
  • அதிகரித்து வரும் காற்றுப் பதனாக்கிகளின் தேவை, நிலையான தீர்வுகள் இல்லாமல் அது தொடர்பான CO2 உமிழ்வை இரட்டிப்பாக்கி 7.2 பில்லியன் டன்களாக உயர்த்தக் கூடும்.
  • ஒரு நிலையான குளிர்விப்பு செயல் முறை, 2050 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வை 64% குறைத்து, மின்சாரம் மற்றும் மின் கட்டமைப்பு முதலீடுகளில் 43 டிரில்லியன் டாலரை சேமிக்கும்.
  • ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது குளிர்விப்புக்கான போதுமான அணுகலைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு எந்தவித நடவடிக்கையும் இல்லை எனில் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்