2023 ஆம் ஆண்டு இந்திய எரிசக்தி வார நிகழ்வில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி என்ற அமைப்பினை இந்தியா தொடங்கி வைத்தது.
அமெரிக்கா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச எரிசக்தி முகமை போன்ற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து உயிரி எரிபொருள் பயன்பாட்டினை மிகவும் ஊக்குவிப்பதற்காக ஒரு சாதகமான சூழல் அமைப்பை உருவாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரி எரிபொருளினை விரைவாக ஏற்றுக் கொள்வதற்காக, அதற்கான எரிபொருள் தரநிலைகள் மற்றும் எந்திரங்களுக்கு உகந்த சூழல் அமைப்பை உருவாக்குவதையும், தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை உருவாக்குவதையும் இந்த கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.