நைரோபியில் நடைபெற்ற 7வது UNEP அமர்வின் போது UNEP ஆது 7வது உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது.
பசுமை இல்ல வாயு உமிழ்வானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2024 ஆம் ஆண்டில் உலகம் 1.55°C வெப்பமயமாதலை எட்டியதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்ற நிலையில்மேலும் 40% வரை நிலம் தரமிழந்து வருகிறது.
பருவநிலைப் பேரழிவுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 143 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது என்ற நிலையில்மாசுபாடு 9 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
உலகில் 8,000 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உள்ளன இதனால் கடுமையான சுகாதாரம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.
1972 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட UNEP ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முக்கிய உலகளாவிய அமைப்பாகும்.