TNPSC Thervupettagam

உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026

January 25 , 2026 14 hrs 0 min 56 0
  • தமிழ்நாடு அரசானது, மகாபலிபுரத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்து வருகிறது.
  • இந்த உச்சி மாநாடு தமிழ்நாட்டின் சுற்றுலா மீதான பலங்களை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவியத் தளமாக நடத்தப்படும்.
  • இது கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் ஆக்க வல்லுநர்களை ஒன்றிணைக்கும்.
  • புதிய யுக முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • டிஜிட்டல் மற்றும் பயணத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா மற்றும் கடல் சார் பொருளாதாரச் சுற்றுலா ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.
  • புத்தொழில் நிறுவனங்கள், திறன்கள் மற்றும் சுற்றுலாவில் வேலைவாய்ப்பு மூலம் இளையோர் வாய்ப்புகள் குறித்தும் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்