TNPSC Thervupettagam

உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதல் 2025

July 6 , 2025 6 days 55 0
  • அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் சுமார் 8,530 செயற்கைக் கோள்களை ஏவியதன் மூலம் உலகிலேயே முன்னணியில் உள்ளது.
  • செயற்கைக்கோள் நிலை நிறுத்துதல்களில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மொத்தம் 136 செயற்கைக் கோள்கள் ஏவியதுடன் இந்தியா உலகளவில் 7வது இடத்தில் உள்ளது.
  • செயற்கைக் கோள் நிலை நிறுத்துதல் என்பது தகவல் தொடர்பு, பாதுகாப்பு, வானிலை மற்றும் வழிசெலுத்தல் பயன்பாடுகளுக்காக விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்புவதாகும்.
  • ஏவப்படும் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் சிறிய அளவிலானவை மற்றும் மிகப் பெரும்பாலும் செயற்கைக் கோள் திரள்கள் என்று அழைக்கப்படுகின்ற, மிகவும் அதிக எண்ணிக்கையிலான குழுவாக அனுப்பப்படுகின்றன.
  • விண்வெளி ஆய்வு தொழில்நுட்பக் கழகம் (ஸ்பேஸ்எக்ஸ்) மற்றும் அமேசானின் குய்பர் ஆய்வுத் திட்டம் போன்ற சில நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை இயக்குகின்றன.
  • 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு முந்தைய ஆண்டின் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்