உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை (GDCM - Global Digital Content Market) மாநாடு 2018
November 18 , 2018 2454 days 731 0
உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை (Global Digital Content Market-GDCM) மாநாடு 2018 ஆனது ‘ஆசியா பசிபிக் பிராந்தியத்தில்‘ கவனம் கொண்டுள்ள வகையில் புது டெல்லியில் நடைபெற்றது.
தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (DIPP – Department of Industrial Policy and Promotion) ஏற்பாடு செய்யப்பட்டது.
திரைப்படங்கள், இசை மற்றும் ஊடகங்களில் மிகவும் வலுவான ஆக்கப் பூர்வமான தொழில்துறையைக் கொண்டிருப்பதன் காரணமாக இம்மாநாட்டினை நடத்தும் நாடாக இந்தியாவானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.