உலகளாவிய டிஜிட்டல் வாலட்/எண்ணிமக் கோப்புறை பதிவிறக்கங்கள்
June 16 , 2026 13 hrs 0 min 39 0
சென்சார் டவர் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 440 மில்லியனுக்கும் அதிகமான செயலி பதிவிறக்கங்களுடன், இந்தியா உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வாலட் / எண்ணிமக் கோப்புறைச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவு செய்யப்பட்ட 1.8 பில்லியன் டிஜிட்டல் வாலட் / எண்ணிமக் கோப்புறைச் செயலி பதிவிறக்கங்களில், 440 மில்லியனுக்கும் மேலான பதிவிறக்கங்களை இந்தியா பங்களித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் PhonePe உலகின் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் வாலட்/எண்ணிமக் கோப்புறைச் செயலியாக மாறியுள்ளது.
Paytm மற்றும் BHIM ஆகியவை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டணத் தளங்களாகத் தொடர்கின்றன.
2025 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) ஆனது ₹299.7 டிரில்லியன் மதிப்பிலான சுமார் 228.5 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயலாக்கி, இந்தியாவின் டிஜிட்டல் கட்டணப் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறது.