உலகளவிலும் அமெரிக்காவிலும் தட்டம்மை நோயாளிகளின் மிக ஆபத்தான மற்றும் கடுமையான மீள் எழுச்சி குறித்து அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான பாதிப்புகளை அமெரிக்கா சமீபத்தில் கொண்டுள்ளது.
தடுப்பூசி விகிதங்கள் குறைந்து வருவதால் இந்த மீள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெறும் 10,000 ஆக இருந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 10.3 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக WHO குறிப்பிட்டது.
ஒட்டுமொத்தப் பெருந்தொற்றுகளில் கிட்டத்தட்ட பாதியளவு ஆப்பிரிக்காவில் காணப் பட்டன.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் சுமார் 41 நாடுகள் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.
தட்டம்மை என்பது மிகவும் தொற்றக் கூடிய மற்றும் கடுமையான காற்றில் பரவும் ஒரு நோயாகும்.