ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் உலகளாவிய நகரங்கள் குறியீடு (GCI) 2026-இல் 1,000 நகரங்களில் டெல்லி 268-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய நகரங்கள் குறியீடு என்பது ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் வெளியிடும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும், இது பொருளாதாரம், மனித மூலதனம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுகிறது.
இக்குறியீட்டில் நியூயார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து லண்டன், பாரிஸ், சியாட்டில் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்திய நகரங்களில், டெல்லி (268) மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து பெங்களூரு (311), மும்பை (330), சென்னை (381), ஹைதராபாத் (421) மற்றும் புனே (427) ஆகிய நகரங்கள் உள்ளன.
சுமார் 100 இந்திய நகரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் 100 நகரப் பொருளாதாரங்களில் 55 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.
பெங்களூரு 20 இடங்கள் முன்னேறி "கவனிக்க வேண்டிய நகரம்" எனப் பட்டியலிடப் பட்டுள்ளது, அதே நேரத்தில் மனித மூலதனத்தில் டெல்லி உலகளவில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.