TNPSC Thervupettagam

உலகளாவிய நதிகளில் நுண்ணுயிர்க் கொல்லிகளின் மாசுபாடு

May 21 , 2025 14 hrs 0 min 64 0
  • மனித நுண்ணுயிர்க் கொல்லிகளின் பயன்பாட்டின் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய நதி மாசுபாட்டின் அளவை இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
  • 2012-2015 ஆம் ஆண்டு முதல், அதிகம் பயன்படுத்தப்படும் சுமார் 40 நுண்ணுயிர்க் கொல்லிகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 29,200 மெட்ரிக் டன்கள் மக்களால் நுகரப் படுகின்றன.
  • அந்த நுண்ணுயிர்க் கொல்லிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆனது, அதாவது சுமார் 8,500 மெட்ரிக் டன்கள் உலகளாவிய ஆறுகளில் கலக்கப்பட்டன.
  • உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லியான அமோக்ஸிசிலின், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் ஆபத்தான அளவில் காணப்பட வாய்ப்புள்ளது.
  • பல்வேறு பாக்டீரியா தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு வேண்டி நுண்ணுயிர்க் கொல்லிகள் மிக முக்கியமானவையாகும்.
  • இவை மக்கள், கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மீன்களுக்கு பரவலாக வழங்கப் படுகின்றன ஆனால் இந்த மருந்துகள் உடலால் ஓரளவு மட்டுமே அவற்றால் உறிஞ்சப் படுகின்றன.
  • வெளியேற்றப்படுகின்ற அதிகளவிலான நுண்ணுயிர்க் கொல்லிகள் சுற்றுச்சூழலில், குறிப்பாக நீர்நிலைகளில் நுழைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்