உலகளாவிய நன்மைக்கான கூட்டணி - பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம்
March 6 , 2024 659 days 430 0
உலகளாவிய நன்மைக்கான கூட்டணி : பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம் ஆனது 2024 ஆம் ஆண்டு டாவோஸ் உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டணிக்கான முத்திரைச் சின்னம் மற்றும் இணையதளத்தை இந்திய அரசு வெளியிட்டது.
பல்வேறு நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ப, உலகளாவிய பல்வேறு சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்தல், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் உடல்நலம், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றினை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமத்துவம் மற்றும் நடுநிலையின் சாராம்சத்தினை அடையாளப்படுத்தும் இந்தக் கூட்டணியின் முத்திரைச் சின்னம் ஆனது உள்ளார்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டு உள்ளது.