குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் (GIFT நகரம்) ஆனது 38வது உலகளாவிய நிதி மையங்களின் குறியீட்டில் (GFCI 38-2025) 3 இடங்கள் முன்னேறி 43வது இடத்தைப் பிடித்தது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முதல் 15 இடங்களில் உள்ள ஒரே இந்திய நிதி மையமாக GIFT நகரம் உள்ளது.
இந்தத் தரவரிசையில் நியூயார்க் நகரம் (அமெரிக்கா) முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து இலண்டன் (ஐக்கியப் பேரரசு) மற்றும் ஹாங்காங் (சீனா) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.