எரிசக்தி மற்றும் வள ஆதாரங்கள் நிறுவனத்தின் உலகளாவிய நிலையான மேம்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரை ஆற்றினார்.
இது இந்த நிறுவனத்தினால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
நிலையான மேம்பாடு, நிலையான உற்பத்தி, பருவநிலை மாற்றம், உலகப் பொது மக்கள், ஆற்றல் பரிமாற்றங்கள் மற்றும் வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பரவலான சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் இந்த மாநாட்டில் இடம் பெறும்.
இந்த ஆண்டின் உச்சி மாநாடானது புதுடெல்லியில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “நெகிழ்திறன் கொண்ட ஒரு கோளினை நோக்கி : நிலையான மற்றும் சமமான எதிர்காலத்தினை உறுதி செய்தல்” (Towards a Resilient Planet: Ensuring a Sustainable and Equitable Future) என்பதாகும்.