TNPSC Thervupettagam

உலகளாவிய நீர் திவால்நிலை அறிக்கை 2026

January 24 , 2026 2 days 48 0
  • ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) உலகமானது உலகளாவிய நீர் திவால்நிலை சகாப்தத்தில் நுழைந்து உள்ளதாகக் கூறுகிறது.
  • நீர் திவால்நிலை என்பது மனிதர்கள் பாதுகாப்பாக மீள் நிரப்பக்கூடியதை விட அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும் என்பதோடு இது ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள், ஈரநிலங்கள், மண் மற்றும் பனிப்பாறைகளுக்கு நீண்டகாலச் சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • இது நீர் வளம் மீதான அழுத்தம் (அதிக தேவை, பெரும்பாலும் மீளக்கூடியது) மற்றும் நீர் நெருக்கடி (தற்காலிக அதிர்ச்சி, அவசர நடவடிக்கைகளால் சரி செய்யக் கூடியது) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.
  • இதற்கான காரணங்களில் நீர் வளம் மெதுவாகக் குறைதல், பெரிய அணைகள் போன்ற உள்கட்டமைப்பினால் உந்தப்பட்ட அதிகப்படியான நீர்மட்டம், ஈரநிலங்கள் மற்றும் காடுகளின் சுற்றுச்சூழல் தரமிழப்பு மற்றும் பருவநிலையினால் பெருக்கப் பட்ட அதிகப்படியான நீர்மட்டம் ஆகியவை அடங்கும்.
  • பல நீர் அமைப்புகள் மீளமுடியாத அளவிற்கு சேதமடையக் கூடும் என்றும், சுற்றுச்சூழல் அமைப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கலாம் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்