உலகளாவிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம்: இந்தியா
September 14 , 2019 2161 days 779 0
இந்தியா ஒரு புதிய உறுப்பினராக உலகளாவிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு(Global Antimicrobial Resistance - AMR) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development - R&D) மையத்தில் இணைந்துள்ளது.
AMR R&D ஆனது 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற உலக சுகாதாரச் சபையின் 71வது அமர்வின் முடிவில் தொடங்கப்பட்டது.
இது நுண்ணுயிர்க் கொல்லிக்கு எதிரான தாங்கும் திறனை எதிர்ப்பதற்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.
இது முக்கியமாக ஜெர்மன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்றது. இதன் செயலகம் பெர்லினில் உள்ளது.