உலகளாவிய நெகிழி மாசுபாட்டில் முன்னணியில் உள்ள நாடு
September 13 , 2024 321 days 264 0
ஆண்டிற்கு சுமார் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் (Mt) அளவு உமிழ்வுடன் உலகளாவிய நெகிழி உமிழ்வுகளில் இந்தியா ஐந்தில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.
உலகளாவிய நெகிழி உமிழ்வில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை முறையே 3.5 மெட்ரிக் மற்றும் 3.4 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ நெகிழிக் கழிவு உற்பத்தி விகிதம் ஆனது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 0.12 கிலோகிராம் ஆகும்.
இதற்கு முன், உலக அளவில் அதிக மாசு உண்டாக்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருந்தது, ஆனால் தற்போது அந்தத் தரவரிசையில் சீனா நான்காவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகளாவிய நெகிழிக் கழிவு உமிழ்வு ஆனது 52.1 மெட்ரிக் டன்னை எட்டியது.
குறிப்பிடத்தக்க வகையில், உலகளாவிய நெகிழிக் கழிவு உமிழ்வுகளில் 69% அல்லது ஆண்டிற்கு 35.7 மெட்ரிக் டன் உமிழ்வானது 20 நாடுகளில் இருந்து உருவாகிறது.