உலகளாவிய பட்டினிக் குறியீடு - 102வது இடத்தில் இந்தியா
October 16 , 2019 2099 days 757 0
உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் (Global Hunger Index - GHI) இந்தியா 2010 ஆம் ஆண்டில் 95வது இடத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 102வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
இந்தக் குறியீட்டில் மொத்தம் 117 நாடுகள் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு முதல், GHI ஆனது வெல்த்ஹங்கர்ஹெல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைட் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (International Food Policy Research Institute - IFPRI) வெளியிடப் படுகின்ற ஒரு கூட்டுத் திட்டமாகும்.
இந்தக் குறியீட்டில் தெற்காசிய நாடுகளிடையே மிகக் குறைந்த தரவரிசையில் இந்தியா உள்ளது. இந்தக் குறியீட்டில் பிற பிரிக்ஸ் நாடுகளுக்குப் பின்னால் இந்தியா இருக்கின்றது.
தெற்காசியாவில் இந்தியாவிற்குப் பின்னால் தரவரிசைப் படுத்தப்பட்ட ஒரே நாடான பாகிஸ்தான் கூட, 2019 ஆம் ஆண்டின் தரவரிசையில் 94வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
GHI மதிப்பெண்
GHI மதிப்பெண் ஆனது பின்வருவனவற்றின் அடிப்படையில் 2014 முதல் 2018 வரையிலான தரவை பிரதிபலிக்கின்றது.
ஒரு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையின் விகிதம்
உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாத அல்லது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்.
இந்தியாவின் குழந்தை மெலிதல் விகிதமானது 20.8% (இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிக அதிக குழந்தை மெலிதல் விகிதம்) என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது.
குழந்தை மெலிதல் விகிதம் – குழந்தை மெலிதல் அல்லது உயரத்திற்கு ஏற்ற எடையற்ற குறைந்த எடை கொண்ட குழந்தைகள் விகிதமானது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையேயான இறப்பு விகிதத்தை முன்கூட்டியே வலுவாக கணிக்க உதவும் ஒரு கூறாகும்.
“கடுமையான பட்டினிப்” பிரிவு
GHI ஆனது 100 புள்ளிகள் என்ற அளவில் நாடுகளை தரவரிசைப் படுத்துகின்றது. இந்தக் குறியீட்டில் உள்ள 0 ஆனது சிறந்த மதிப்பெண்ணையும் (பட்டினி இல்லாத) மற்றும் 100 ஆனது மிக மோசமான மதிப்பெண்ணையும் குறிக்கின்றது.
இக்குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் 30.3 ஆக உள்ளது. இந்தியா இக்குறியீட்டில் கடுமையான பட்டினிப் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
காலநிலை மாற்றமானது உணவின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கடுமையாக பாதிக்கின்றது. இது பயிரிடப்பட்ட உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மிகவும் மோசமாக்குகின்றது.