TNPSC Thervupettagam

உலகளாவிய பட்டினிக் குறியீடு 2026

October 19 , 2026 5 days 132 0
  • வெல்துங்கர்ஹில்ஃப் (WHH), ஹெல்வெட்டாஸ் மற்றும் அமைதி மற்றும் ஆயுத மோதலுக்கான சர்வதேச சட்ட நிறுவனம் (IFHV) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினிக் குறியீடு 2026 (GHI) ஆனது, உலகளாவிய பட்டினி மதிப்பெண்ணை 18.1 எனப் பதிவு செய்துள்ளது.
  • உலகளாவிய மதிப்பெண் 2018 ஆம் ஆண்டில் 17.6 லிருந்து 2026 ஆம் ஆண்டில் 18.1 ஆக மோசமடைந்தது, இது மிதமான பட்டினிப் பிரிவில் உள்ளது.
  • ஊட்டச்சத்தின்மை, குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு, குழந்தைகளின் உடல் மெலிவு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே குழந்தை இறப்பு ஆகிய நான்கு குறிகாட்டிகளை GHI அளவிடுகிறது.
  • சோமாலியா, புருண்டி, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மடகாஸ்கர் உள்ளிட்ட எட்டு நாடுகள் ஆபத்தான பட்டினி அளவைக் கொண்டிருப்பதாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • துணை-சஹாரா ஆப்பிரிக்கா 27.5 மதிப்பெண்களுடன் கடுமையான பட்டினி அளவை பதிவு செய்துள்ளது, அதே சமயம் தெற்காசியா 23.5 மதிப்பெண்களைப் பெற்று கடுமையான பிரிவில் உள்ளது.
  • ஆயுத மோதல்கள், பருவநிலைப் பாதிப்புகள் மற்றும் குறைக்கப்பட்ட உதவி நிதியுதவி ஆகியவை உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்குகின்றன, அதே சமயம் நேபாளம், உகாண்டா மற்றும் டோகோ ஆகியவை பட்டினியைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்