TNPSC Thervupettagam

உலகளாவிய பதின்ம வயதினரின் புகைபிடித்தல் குறித்த WHO அறிக்கை

October 11 , 2025 13 hrs 0 min 7 0
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகளவில் 13 முதல் 15 பேர் வரையிலான சுமார் 15 மில்லியன் சிறார்கள் வயது வந்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் மின்னணு-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • உலகளவில் 9.1 மில்லியன் சிறுவர்களும் 5.6 மில்லியன் சிறுமிகளும் தற்போது மின்னணு சிகரெட் /வேப் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அறிக்கை கூறுகிறது என்ற நிலையில் இது உலகளவில் 7.2% இளம் பருவத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • மின்னணு சிகரெட் புகைத்தல்/வாப்பிங் ஆனது பல தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடும் என்று WHO எச்சரிக்கிறது.
  • மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விளம்பரத்தைத் தடை செய்யும் 2019 ஆம் ஆண்டு மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தினை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
  • இந்தியாவில் முதல் முறையாக மின்னணு சிகரெட் உபயோகிக்கும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்