TNPSC Thervupettagam

உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026

July 24 , 2026 3 days 74 0
  • உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) 2026-இன் 13-வது பதிப்பு, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதம் சரிவைக் கண்டதாக அறிக்கை அளித்துள்ளது, பயங்கர வாதம் தொடர்பான இறப்புகள் 28% குறைந்துள்ளன மற்றும் சம்பவங்கள் 22% குறைந்து உள்ளன.
  • ஆஸ்திரேலியாவின் சிட்னியைத் தலைமையிடமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தாக்குதல்கள் குறைந்த போதிலும், பயங்கரவாதம் அதிக கவனம் செலுத்தப் படுவதாகவும், பரவலாக்கப்பட்டதாகவும் மற்றும் டிஜிட்டல் முறையைச் சார்ந்ததாகவும் மாறி வருகிறது.
  • பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகளில் சுமார் 70% பாகிஸ்தான், புர்கினா பாசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
  • பயங்கரவாதக் குழுக்கள் இணையவழித் தீவிரவாதம், தனிநபர் தாக்குதல்கள், சிறிய தன்னாட்சிக் குழுக்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்