TNPSC Thervupettagam

உலகளாவிய பருவநிலை-சுகாதார தகவமைப்புத் திட்டம்

November 18 , 2025 9 days 50 0
  • பெலெம் சுகாதார செயல் திட்டம் (BHAP) ஆனது COP30 மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • இது குறிப்பாக ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் சர்வதேச பருவநிலை தகவமைப்பு கட்டமைப்பாகும்.
  • இந்தத் திட்டமானது கண்காணிப்பு அமைப்புகள், சான்றுகள் சார்ந்த கொள்கைகள் மற்றும் சுகாதாரக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய 60 செயல் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • BHAP செயல்படுத்தலை ஆதரிக்க 300 மில்லியன் டாலர் முதலீடு அறிவிக்கப்பட்டது.
  • இந்தக் கட்டமைப்பு ஆனது வெப்ப அலைகள், நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள் மற்றும் உணவு மற்றும் நீர் அமைப்புகளின் சீர்குலைவு உள்ளிட்ட பருவநிலை தொடர்பான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்கிறது.
  • BHAP என்பது தகவமைப்பு மிக்க சுகாதார அமைப்புகளை ஊக்குவிக்கின்ற COP30 செயல்திட்டத்தின் குறிக்கோள் 16 என்பதன் ஒரு பகுதியாகும்.
  • உலக வங்கியின் தகவல் படி, துரிதப்படுத்தப்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் சுகாதாரத் தாக்கங்கள், 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 14.5–15.6 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
  • சுகாதாரத்திற்கு 0.5–4% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்திற்கான உலகளாவியப் பருவநிலை தகவமைப்பு நிதி குறைவாக உள்ளது.
  • BHAP ஆனது 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெரும்பாலும் உரிமையியல் சமூகம் மற்றும் ஐ.நா. நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, பருவநிலை தகவமைப்பு கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குதல், நிதி மற்றும் தொழில்நுட்பத்தைத் திரட்டுதல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்