TNPSC Thervupettagam

உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு 2025

October 25 , 2025 11 days 88 0
  • UNDP மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு (OPHI) "Overlapping Hardships: Poverty and Climate Hazards" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டன.
  • உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆனது வருமானத்திற்கு அப்பாற் பட்ட சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான வறுமையை அளவிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டின் அறிக்கை 109 நாடுகளை மதிப்பிட்டு, 1.1 பில்லியன் மக்கள், அதாவது 18.3 சதவீதம் பேர், கடுமையான பல பரிமாண வறுமையில் வாழ்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது.
  • ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் சுமார் 43.6 சதவீதம் பேர், அதாவது சுமார் 501 மில்லியன் மக்கள், குறைந்தது பாதியளவிலான MPI குறிகாட்டிகளில் பற்றாக் குறையுடன் கடுமையான வறுமை நிலையை எதிர் கொள்கின்றனர்.
  • உலக மக்கள்தொகையில் 33.6 சதவீதமாக இருக்கும் குழந்தைகள், பல பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து நபர்களில் 51 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர்.
  • நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 740 மில்லியன் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் உள்ளனர் என்பதோடு இது உலகின் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
  • சுமார் 80 சதவீத ஏழைகள் வறட்சி, வெள்ளம் அல்லது கடுமையான வெப்பம் போன்ற பருவநிலை ஆபத்துகளுக்கு ஆளாகும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பதோடு இது பற்றாக்குறையுடன் சுற்றுச்சூழல் ஆபத்தினையும் சேர்க்கிறது.
  • இந்தியா 2005-06 ஆம் ஆண்டில் 55.1 சதவீதமாக இருந்த பல பரிமாண வறுமை நிலையை 16.4 சதவீதமாகக் குறைத்து, 414 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
  • இந்தியாவில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்படும் பருவநிலைப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்