பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்த அதன் முதல் உலகளாவிய மதிப்பீட்டை வெளியிட்டதில் மதிப்பிடப் பட்ட ஆழமற்ற நீர் பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் 96% மிகக் கடுமையான ஆபத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடானது 80 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 127 வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலச் சுற்றுச்சூழல் பகுதிகளில் உள்ள 188,362 சதுர கி.மீ பரப்பளவிலான பவளப்பாறைகளை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். இது பெருங்கடல் வெப்பமடைதல், கடல் வெப்ப அலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளிறுதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான மீன்பிடித்தல், மாசுபாடு, கடலோர மேம்பாடு மற்றும் அதிகப்படியான சுற்றுலா ஆகியவையும் முக்கிய அச்சுறுத்தல்களாகும். மேலும் குறைந்து வரும் மீன்களின் எண்ணிக்கை 63% பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்துகிறது.
பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef), பவள முக்கோணம் (Coral Triangle), மெசோஅமெரிக்கன் பவளத்திட்டு மற்றும் செங்கடல் பவளப்பாறைகள் உள்ளிட்ட முக்கிய பவளப்பாறைகள் மிகக் கடுமையான ஆபத்தில் இருப்பவையாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
பவளப்பாறைகள் சுமார் 25% கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆதரவளிக்கின்றன. மேலும் வலுவான பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை மேலும் சரிவைத் தடுக்க உதவும் என்று இந்த மதிப்பீடு குறிப்பிடுகிறது.