2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு (TNGSS) ஆனது கோவையில் நடத்தப் பட்டது.
2021 ஆம் ஆண்டில் 2,032 ஆக இருந்த தமிழ்நாட்டின் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 12,000க்கும் அதிகமாக உயர்ந்தது.
இந்த சூழல் அமைப்பின் மதிப்பு ஆனது, 3 பில்லியன் டாலரிலிருந்து 27.4 பில்லியன் டாலராக உயர்ந்தது.
இந்த உச்சி மாநாட்டை தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமை திட்ட அமைப்பு (StartupTN) ஏற்பாடு செய்தது.
ஸ்டார்ட்அப்TN நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பங்கு தாரர்களுடனான இணைப்பு, நிகழ்வுப் பட்டியல்கள் மற்றும் தனிப் பயனாக்கப் பட்ட வலையமைப்புக் கருவிகளுடன் TNGSS செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, 'Disrupt to Rise’ என்பதாகும்.