TNPSC Thervupettagam

உலகளாவிய பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு அறிக்கை 2023

March 30 , 2026 11 hrs 0 min 32 0
  • 'The Lancet Obstetrics, Gynaecology and Women's Health' இதழில் வெளியிடப்பட்ட உலகளாவியப் பகுப்பாய்வு 2023ம் ஆண்டிற்கான பேறுகாலத் தாய்மார்கள் இறப்புத் தரவை வெளியிட்டுள்ளது.
  • 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 24,700 தாய்வழி இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இது தெற்காசியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளில் ஒன்றாகும்.
  • இந்த ஆய்வு 204 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய நோய் சுமை (GBD) 2023 ஆம் ஆண்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
  • உலகளவில் சுமார் 2.4 லட்சம் தாய்வழி இறப்புகள் நிகழ்ந்துள்ளன; பேறுகால தாய் மார்கள்  இறப்பு விகிதம் (MMR) ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 190.5 ஆக உள்ளது.
  • 1990 ஆம் ஆண்டு முதல் தாய்மார்கள் இறப்புகள் குறைந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.
  • மகப்பேறின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் ஆகியவை இறப்பிற்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்