உலகளாவிய பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு அறிக்கை 2023
March 30 , 2026 17 days 95 0
'The Lancet Obstetrics, Gynaecology and Women's Health' இதழில் வெளியிடப்பட்ட உலகளாவியப் பகுப்பாய்வு 2023ம் ஆண்டிற்கான பேறுகாலத் தாய்மார்கள் இறப்புத் தரவை வெளியிட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 24,700 தாய்வழி இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இது தெற்காசியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஆய்வு 204 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய நோய் சுமை (GBD) 2023 ஆம் ஆண்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
உலகளவில் சுமார் 2.4 லட்சம் தாய்வழி இறப்புகள் நிகழ்ந்துள்ளன; பேறுகால தாய் மார்கள் இறப்பு விகிதம் (MMR) ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 190.5 ஆக உள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல் தாய்மார்கள் இறப்புகள் குறைந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.
மகப்பேறின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் ஆகியவை இறப்பிற்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப் பட்டுள்ளன.