“உலகளாவிய சுகாதார சேவை வழங்கலின் பரவலைக் கண்காணித்தல் (UHC): 2025 உலகளாவிய கண்காணிப்பு அறிக்கை” என்ற அறிக்கையானது உலக வங்கி குழுவால் வெளியிடப்பட்டது.
உலகளவில் 10 பேரில் ஒருவர் தீவிர வறுமை கோடான, ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்கின்றனர்.
உலகளாவிய UHC சேவை பரவல் குறியீடு (SCI) 2000 ஆம் ஆண்டில் 54 ஆக இருந்து 2023 ஆம் ஆண்டில் 71 ஆக உயர்ந்தது.
தனது வருவாயிலிருந்து (OOP) மேற்கொள்ளும் சுகாதார செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 34 சதவீதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 26% ஆகக் குறைந்தது.
UHC சேவை வழங்கலில் முன்னேற்றம் ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் மெதுவாக உள்ளது.
சேவைப் பரவல் குறியீடு (SCI) ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 74 அளவினை மட்டுமே எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது உலக மக்கள்தொகையில் 24% பேர் இன்னும் சுகாதாரம் தொடர்பான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள செய்யும்.
தொற்று நோய்க் கட்டுப்பாட்டில் சுகாதார சேவை வழங்கலின் பரவல் முக்கியமாக மேம்பட்டுள்ளது.
இனப்பெருக்கம், பேறு காலம், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை சுகாதார (RMNCH) சேவைகள் குறைந்தபட்ச ஆதாயங்களைக் கண்டன.
தொற்று அல்லாத நோய்கள் (NCDs) மிகக் குறைந்த அளவில் சேவை வழங்கப்படும் களமாகவே உள்ளன.
ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இன்னும் OOP சுகாதார செலவினங்கள் காரணமாக விகிதாசார அளவில் பாதிக்கப்படுகின்றனர்.