உலகளாவிய மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு அறிக்கை 2025
December 19 , 2025 5 days 41 0
"Rewiring GVCs in a Changing Global Economy" என்ற அறிக்கையானது ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்டது.
உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் (GVC) என்பது, ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்புக் கூட்டப்ப டுவதுடன் கூடிய இறுதிக் கட்ட நுகர்வோர் பொருளுக்கான உற்பத்தி தொடர் ஆகும் என்பதோடு மேலும் வெவ்வேறு நாடுகளில் இவற்றில் இருந்து குறைந்தது இரண்டு நிலைகளில் இது மேற்கொள்ளப் படுகின்றது.
தொழில்நுட்ப மாற்றம், பசுமை மாற்றம் மற்றும் மாறி வரும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக இந்த GVCகள் மாற்றியமைக்கப் படுகின்றனவே தவிர இதற்கு நேர்மாறாக மாற்றப் படுவதில்லை.
வர்த்தகத்தில் GVCகளின் உலகளாவியப் பங்கு 46.3% ஆகும் என்பதோடுஇது 2022 ஆம் ஆண்டில் 48% ஆக இருந்தது.
சேவைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆனது, தற்போது உற்பத்தி ஏற்றுமதியில் மதிப்புக் கூட்டலில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது.
ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பிராந்திய மையங்கள் GVC வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன; இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை பின்தங்கியுள்ளன.
வளர்ந்து வரும் போக்குகளில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுசீரமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் (EV) உற்பத்தி (உலகளவில் 76.9%) போன்ற துறைகளில் சீனாவின் ஆதிக்கம் இருந்த போதிலும் உற்பத்தியின் பல்வகைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.
ஏற்றுமதியில் உலகளாவிய உள்நாட்டு மதிப்பில் சுமார் 2.8% பங்கைக் கொண்டு (2024) இந்தியா முதல் 10 மதிப்பு கூட்டும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
இதில் 1% அதிகரிப்பு என்பது தனிநபர் வருமானத்தை வழக்கமான வர்த்தகத்தை விட இரண்டு மடங்கு அதிகரிப்பதுடன், GVC பங்கேற்பு வறுமைக் குறைப்புக்குப் பங்களிக்கிறது.
GVC ஆனது குறிப்பாக வங்காளதேசத்தின் ஏற்றுமதி சார் ஆடைத் துறையில் காணப் படுவது போல், உழைப்பு மிகுந்த மற்றும் பெண் சார்ந்த வேலைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன.