TNPSC Thervupettagam

உலகளாவிய மனநல அறிக்கை – இந்தியா

March 2 , 2026 11 days 86 0
  • சேபியன் ஆய்வகங்களால் வெளியிடப்பட்ட Global Mind Health report என்ற அறிக்கையின் படி, இளைஞர்களின் மன நலனில் 84 நாடுகளில் இந்திய இளைஞர்கள் 60வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
  • இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 78,000 க்கும் மேற்பட்ட இணைய வசதியுள்ள நபர்களிடம் ஆய்வு நடத்தியது.
  • மனநலம் ஆனது, மனநல அளவு ஈவு (MHQ)-ஐப் பயன்படுத்தி அளவிடப்பட்டது, இது 47 அறிவாற்றல், உணர்ச்சி, சமூக மற்றும் உடல் குறிகாட்டிகளை மதிப்பிடுகிறது.
  • 18–34 வயதுடைய இளைஞர்கள் சராசரியாக MHQ மதிப்பெண் 33 ஆகவும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 96 மதிப்பெண்களாகவும் பதிவு செய்தனர்.
  • இந்த அறிக்கை பலவீனமான குடும்பப் பிணைப்புகள், அதிக பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மற்றும் சிறுவயதில் திறன்பேசி பயன்பாடு ஆகியவை முக்கியப் பங்களிப்பு காரணிகளாக அடையாளம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்