சேபியன் ஆய்வகங்களால் வெளியிடப்பட்ட Global Mind Health report என்ற அறிக்கையின் படி, இளைஞர்களின் மன நலனில் 84 நாடுகளில் இந்திய இளைஞர்கள் 60வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 78,000 க்கும் மேற்பட்ட இணைய வசதியுள்ள நபர்களிடம் ஆய்வு நடத்தியது.
மனநலம் ஆனது, மனநல அளவு ஈவு (MHQ)-ஐப் பயன்படுத்தி அளவிடப்பட்டது, இது 47 அறிவாற்றல், உணர்ச்சி, சமூக மற்றும் உடல் குறிகாட்டிகளை மதிப்பிடுகிறது.
18–34 வயதுடைய இளைஞர்கள் சராசரியாக MHQ மதிப்பெண் 33 ஆகவும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 96 மதிப்பெண்களாகவும் பதிவு செய்தனர்.
இந்த அறிக்கை பலவீனமான குடும்பப் பிணைப்புகள், அதிக பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மற்றும் சிறுவயதில் திறன்பேசி பயன்பாடு ஆகியவை முக்கியப் பங்களிப்பு காரணிகளாக அடையாளம் கண்டுள்ளது.