TNPSC Thervupettagam

உலகளாவிய மீத்தேன் குறைப்பு முன்னெடுப்பு

June 27 , 2026 13 hrs 0 min 56 0
  • லண்டன் பருவநிலை நடவடிக்கை வாரத்தின் போது, 2026 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று ஐக்கிய நாடுகள் சபை மீத்தேன் குறைப்பிற்கான உலகளாவிய அழைப்பு மற்றும் 'செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் வெளிப்படைத்தன்மை முன்னெடுப்பு’ ஆகியவற்றைத் தொடங்கியது.
  • கார்பன் டை ஆக்சைடை விட குறுகிய காலத்தில் சுமார் 80 மடங்கு அதிக வீரியம் கொண்ட பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு துறை கசிவுகள், வெளியேற்றுதல் மற்றும் எரித்தல் ஆகியவற்றின் மூலம் மீத்தேன் உமிழ்வின் முக்கிய ஆதாரமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • உமிழ்வை 70% வரை குறைக்க, பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான மீத்தேன் உமிழ்வு மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களை பரவலாகப் பயன்படுத்த ஐநா அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்த செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பானது, முக்கிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களின் கார்பன், நீர் மற்றும் நிலப் பயன்பாட்டுத் தடயங்களை கட்டாயமாக வெளிப்படுத்துவதைக் கோருகிறது.
  • சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, 2030 ஆம் ஆண்டிற்குள் தரவு மையங்களை முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயக்குமாறு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்