உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை
January 30 , 2026 17 hrs 0 min 11 0
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) அமைப்பானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது.
உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) 2025ல் 14% அதிகரித்து 1.6 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பில் 140 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை, உலகளாவிய நிதி மையங்கள் வழியாக வந்த அதிகப்படியான நிதி வரவுகளிலிருந்து கிடைத்தது.
வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரத்து 2025-ல் 43% அதிகரித்து 728 பில்லியன் டாலராக உயர்ந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் 56% அதிகரிப்பைப் பதிவு செய்தது.
ஆனால், வளரும் நாடுகளுக்கான முதலீட்டு வரத்து 2 சதவீதம் குறைந்து 877 பில்லியன் டாலராக ஆனது, இது உலகளாவிய நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 55 சதவீதமாகும்.
UNCTAD என்பது 1964-ல் நிறுவப்பட்ட ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பாகும் என்பதோடுஇதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.