உலகளாவிய முதல் 20 பால் நிறுவனம் – ரபோபாங்க்கின் வருடாந்திரப் பட்டியல்
September 5 , 2020 1793 days 839 0
உலகளாவிய முதல் 20 பால் நிறுவனங்கள் என்ற ரபோபாங்க்கின் வருடாந்திரப் பட்டியலில் நுழைந்த முதலாவது இந்தியப் பால் நிறுவனம் குஜராத் கூட்டுறவு பால் சந்தைக் கூட்டமைப்பான அமுல் நிறுவனம் ஆகும்.
இதில் அமுல் 16வது இடத்திலும் சுவிட்சர்லாந்தில் நெஸ்லே முதலிடத்திலும் பிரான்சின் லக்டாலிஸ் 2வது இடத்திலும் உள்ளன.
அமுல் ஆனது குஜராத்தின் ஆனந்த்தில் உள்ளது.
இதன் இலட்சினை விளக்கம் “இந்தியாவின் சுவை” என்பதாகும்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் படி, உலகளாவியப் பால் உற்பத்தியில் 22% கொண்ட உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.