TNPSC Thervupettagam

உலகளாவிய மேம்பாட்டிற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு

August 2 , 2021 1474 days 685 0
  • ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஒன்றிணைந்துச் செயல்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய மேம்பாட்டுக் கூட்டாண்மை ஒப்பந்தத்தினை இந்தியா மற்றும்  அமெரிக்கா இரண்டும் இணைந்து மேலும் 5 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துள்ளது.
  • வட்டார இணைப்பு, தூய்மையான ஆற்றல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் இவை ஒன்றிணைந்து செயல்படும்.
  • உலகளாவிய மேம்பாட்டிற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த வழிகாட்டுதல் கொள்கைகளின் அறிக்கையினுடைய 2வது திருத்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
  • 2014 ஆம் ஆண்டில் கையெழுத்தான வழிகாட்டுதல் கொள்கைகளின் அறிக்கை ஒப்பந்தமானது மூன்றாம் தரப்பு நாடுகளில் குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பினை வழங்குகின்றது.
  • இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட 2வது திருத்தமானது இதன் காலவரம்பை 2026 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்