2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வறட்சி குறித்த கண்ணோட்ட அறிக்கையானது சமீபத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) வெளியிடப் பட்டது.
வறட்சியின் தீவிரத்தால் அதிகம் பாதிக்கப்படும் OECD நாடுகளில் ஸ்பெயின் நாடும் ஒன்றாக உள்ளது.
2025 ஆம் ஆண்டில் வறட்சியின் சராசரி பொருளாதாரத் தாக்கம் ஆனது, ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விடக் குறைந்தது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இது 2035 ஆம் ஆண்டளவில் மேலும் 35% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரிடர் தொடர்பான உயிரிழப்புகளில் 34% வறட்சி காரணமாக ஏற்படுகிறது.