TNPSC Thervupettagam

உலகளாவிய வெப்ப-அபாயப் பகுதிகள்

June 13 , 2026 2 days 50 0
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வானது குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 நகர்ப்புற மையங்களில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது.
  • வெப்ப வெளிப்பாடு, மக்களின் பாதிப்பு நிலை மற்றும் சமாளிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இது வெப்ப அபாயத்தை மதிப்பிட்டது.
  • 0.68 வெப்ப அபாயப் புள்ளிகளுடன் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய உலகின் முதல் 30 நகரங்களில் ஹைதராபாத் இடம்பிடித்துள்ளது.
  • உலகளவில் குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை விட இந்திய நகர்ப்புறப் பகுதிகள் சுமார் 45% வேகமாக வெப்பமடையக் கூடும் என்று கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் சபையின் (CEEW) கூற்றுப்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 76% க்கும் அதிகமானோர் கடுமையான வெப்பத்தால் அதிக முதல் மிக அதிக அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்