TNPSC Thervupettagam

உலகளாவிய AI முன்னெடுப்பில் இந்தியா

June 6 , 2026 8 days 97 0
  • இந்தியா கிளாஸ்விங் திட்டத்தில் இணைந்துள்ளதுதன் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான 'ஆந்த்ரோபிக்' தனது மேம்பட்ட கிளாட் மித்தோஸ் முன்னோட்டப் பெருமொழி மாதிரிக்கான (LLM) அணுகலை விரிவு படுத்தியுள்ளது.
  • சுமார் 150 நிறுவனங்களுக்கு AI மாதிரிக்கான கட்டுப்பாட்டு அணுகலை வழங்கும் இத்திட்டத்தில் பங்கேற்கும் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்த திட்டம் மின்கட்டமைப்புகள், நீர் விநியோக அமைப்புகள், சுகாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
  • ஆந்த்ரோபிக் நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூருவில் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறந்ததுடன் மேலும் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியா அதன் இரண்டாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது.
  • பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டை மையமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியாவும் ஆந்த்ரோபிக் நிறுவனமும் இணைந்து நடத்தவுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்