இந்தியப் பெருங்கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் மனிதர்கள் வசிக்கும் வகையிலான கடலடி ஆராய்ச்சி ஆய்வகத்தைக் கட்டமைக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது.
வாழ்வதற்குத் தேவையான ஆதரவு அமைப்புகள் மற்றும் அழுத்தத்தை எதிர்க்கும் அமைப்புகளைச் சரிபார்க்க 500 மீட்டர் ஆழத்தில் ஒரு சோதனை தொகுதி முதலில் சோதிக்கப் படும்.
முழு அளவிலான ஆய்வகம் ஆனது, அமெரிக்காவில் உள்ள அக்வாரிஸ் ரீஃப் பேஸ் உட்பட 19 மீட்டர் ஆழத்தில் உள்ள எந்தவொரு ஆராய்ச்சி நிலையத்தையும் விட ஆழமான பகுதியில் செயல்படும்.
இந்த ஆய்வகம் ஆனது ஆழ்கடல் உயிரியல், புவியியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயர் அழுத்தத்தின் கீழ் மனிதச் செயல்திறன் ஆகியவற்றில் ஆய்வுகளை ஆதரிக்கும்.