TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது பெரிய செலாவணி இருப்பு

June 26 , 2025 9 days 51 0
  • தங்கம் ஆனது யூரோவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணி இருப்பு சொத்தாக மாறியுள்ளது.
  • தங்கம் தற்போது உலகளாவிய இருப்புகளில் சுமார் 20% பங்கினைக் கொண்டுள்ளது என்பதோடு இது யூரோவின் 16 சதவீதப் பங்கினை விட அதிகமாக உள்ளது.
  • அமெரிக்க டாலர் ஆனது அதிகப் பங்கினைக் கொண்ட பண மதிப்பு சார் இருப்பாக தொடர்ந்து உள்ளது.
  • இது உலகளாவிய இருப்புகளில் 46% பங்கினைக் கொண்டுள்ளது.
  • மத்திய வங்கிகள் ஆனது, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் சுமார் 1,000 டன்களுக்கு மேலான கொள்முதலுடன் சமீபத்திய ஆண்டுகளில் தங்கக் கொள்முதலை கணிசமாக அதிகரித்துள்ளன.
  • இது முந்தையப் பத்தாண்டுகளின் 400–500 டன்கள் என்ற ஒரு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • உலகளாவிய அதிகாரப்பூர்வத் தங்க இருப்பு 36,000 டன்களை எட்டியுள்ளது.
  • இது 1965 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 38,000 டன்கள் என்ற வரலாற்று உச்சத்தை நெருங்கி வருகிறது.
  • உலக தங்கச் சபையின் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப் படி இந்திய ரிசர்வ் வங்கியானது 876.18 டன் தங்க இருப்பைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்