தங்கம் ஆனது யூரோவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணி இருப்பு சொத்தாக மாறியுள்ளது.
தங்கம் தற்போது உலகளாவிய இருப்புகளில் சுமார் 20% பங்கினைக் கொண்டுள்ளது என்பதோடு இது யூரோவின் 16 சதவீதப் பங்கினை விட அதிகமாக உள்ளது.
அமெரிக்க டாலர் ஆனது அதிகப் பங்கினைக் கொண்ட பண மதிப்பு சார் இருப்பாக தொடர்ந்து உள்ளது.
இது உலகளாவிய இருப்புகளில் 46% பங்கினைக் கொண்டுள்ளது.
மத்திய வங்கிகள் ஆனது, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் சுமார் 1,000 டன்களுக்கு மேலான கொள்முதலுடன் சமீபத்திய ஆண்டுகளில் தங்கக் கொள்முதலை கணிசமாக அதிகரித்துள்ளன.
இது முந்தையப் பத்தாண்டுகளின் 400–500 டன்கள் என்ற ஒரு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
உலகளாவிய அதிகாரப்பூர்வத் தங்க இருப்பு 36,000 டன்களை எட்டியுள்ளது.
இது 1965 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 38,000 டன்கள் என்ற வரலாற்று உச்சத்தை நெருங்கி வருகிறது.
உலக தங்கச் சபையின் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப் படி இந்திய ரிசர்வ் வங்கியானது 876.18 டன் தங்க இருப்பைக் கொண்டிருந்தது.