உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளில் 3 இந்தியர்கள்
November 1 , 2019 2081 days 842 0
ஹார்வர்ட் வணிக ஆய்வு (Harvard Business Review - HBR) அமைப்பினால் தொகுக்கப்பட்ட சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று தலைமை நிர்வாக அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
HBRயினால் வெளியிடப்பட்ட 'உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், 2019' என்ற பட்டியலில் 100 தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விஐடிஐஏ என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாந்தனு நாராயென் 6வது இடத்திலும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அஜய் பங்கா 7வது இடத்திலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான நாதெல்லா 9வது இடத்திலும் உள்ளனர்.
இந்தத் தரவரிசையானது நிதியியல் செயல்பாடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை ஆகியவற்றின் மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.