முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது போர்ப்ஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த முதலாளிகள் பட்டியலில் இந்தியப் பெரு நிறுவனங்கள் அளவில் முதலிடத்தில் உள்ளது.
உலக அளவிலான 750 உலகப் பெருநிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் 52வது இடத்தைப் பெற்றுள்ளது.
தென்கொரிய நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இப்பட்டியலின் ஒட்டு மொத்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலானது சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டாவுடன் இணைந்து போர்ப்ஸ் அமைப்பினால் தயாரிக்கப் பட்டுள்ளது.