உலகின் பழங்குடியின மக்களின் நிலை குறித்த அறிக்கை 2025
April 29 , 2025 13 hrs 0 min 29 0
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN-DESA) ஆனது, சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் சர்வதேசப் பருவநிலை நிதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுகிறார்கள் என்பதோடு பருவநிலைத் தீர்வுகளிலிருந்துப் பெரும்பாலும் விலக்கப் படுகிறார்கள்.
உலக மக்கள்தொகையில் சுமார் 6% மட்டுமே உள்ள அவர்கள் புவியின் மீதமுள்ளப் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 80 சதவீதப் பகுதியினைப் பாதுகாக்கின்றனர்.
வளங்களைக் குறைவிற்கு உட்படுத்தாமல் பூமியை மிகவும் நன்கு பராமரிக்கும் உள் நாட்டுப் பாரம்பரிய வேளாண் நடைமுறைகளுடன், நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களின் பாரம்பரியப் பயன்பாடு மற்றும் மேலாண்மைக்கான ஆதாரமாகவும் அவர்கள் உள்ளனர்.