உலகின் புலம்பெயர்ந்த இனங்களின் நிலை பற்றிய அறிக்கை
March 10 , 2026 84 days 214 0
உலகின் புலம்பெயர்ந்த இனங்களின் நிலை குறித்த இடைக்கால அறிக்கையானது, உலகளவில் புலம்பெயர்ந்த இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ் உள்ள புலம் பெயரும் வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (CMS) படி தயாரிக்கப் படுகிறது.
இது CMS ஒப்பந்தத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 1,189 புலம்பெயர்ந்த இனங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடுகிறது.
புலம்பெயர்ந்த இனங்களில் சுமார் 49% எண்ணிக்கை குறைந்து வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது.
இந்த இனங்களில் சுமார் 24% அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
வாழ்விட இழப்பு, அதிகப்படியான சுரண்டல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதி தீவிர பறவைக் காய்ச்சல் (H5N1) போன்ற நோய்கள் முக்கிய அச்சுறுத்தல்களாகக் கருதப் படுகின்றன.