உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணப் பரிவர்த்தனைக்குத் தடை – ஐக்கிய ராஜ்ஜியம்
July 1 , 2021 1599 days 755 0
பிரிட்டனின் நிதியியல் செயல்பாட்டு ஆணையமானது பைனான்சு (Binance) எனப் படும் உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குத் தடை விதித்துள்ளது.
பைனான்சு என்பது கேமேன் தீவுகளில் மேற்கொள்ளப் படும் ஒரு இணைய சங்கேதப் பண பரிவர்த்தனையாகும்.
இது 2017 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது பல்வேறு இணைய சங்கேதப் பண பரிவர்த்தனைக்கான தளங்களை உருவாக்கி உள்ளது.
இது சாங்க்பெங்ச் ஜாவோ என்பவரால் நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் முதலில் சீனாவில் அமைந்திருந்தது.
சீனாவில் அதிகரிக்கப்பட்ட இணைய சங்கேதப் பணம் மீதான கட்டுப்பாடுகளின் காரணமாக இதன் தலைமையகமானது பின்பு சீனாவிலிருந்து இடம் மாற்றப்பட்டது.