உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரியசக்தி மின் நிலையம்
November 30 , 2023 724 days 596 0
ஐக்கிய அரபு அமீரகமானது, உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரிய சக்தி மின் நிலையத்தினைத் திறந்து வைத்துள்ளது.
2-ஜிகாவாட் திறன் கொண்ட அல் தஃப்ரா சூரிய சக்தி ஒளி மின்னழுத்த தனிப்பட்ட ஆற்றல் நிலையம் (IPP) ஆனது, அபுதாபி நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது கிட்டத்தட்ட 200,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமான மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யும்.
இந்த ஆலையானது ஆண்டுதோறும் 2.4 மில்லியன் டன் கார்பன் உமிழ்வினை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.