உலகின் மிகப்பெரிய சுற்றுலாப் பொருளாதாரங்களின் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா 2025 ஆம் ஆண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகச் சுற்றுலா மற்றும் சுற்றுலாச் சபையின் (WTTC) படி, இந்தியா சுற்றுலாவில் 231.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிக்கிறது.
2.36 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்களிப்புடன் அமெரிக்கா உலகச் சுற்றுலாப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சீனா (1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் ஜெர்மனி (487.6 பில்லியன் அமெரிக்க டாலர்) உள்ளன.
உலகளாவியப் பயண மற்றும் சுற்றுலாத் துறையானது 2023 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்திற்கு 10.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைப் பங்களித்தது, மேலும் இது 2034 ஆம் ஆண்டில் சுமார் 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.