TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தானியங்கள் சேமிப்புத் திட்டம்

February 18 , 2026 19 hrs 0 min 24 0
  • கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானியங்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட், முன்னோடி மாவட்டமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
  • பர்ஸ்வாடாவில் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கம் (PACS) அமைப்பால் 500 மெட்ரிக் டன் (MT) கிடங்கு கட்டப்பட்டது.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் வேளாண் சந்தைப்படுத்தல் உள் கட்டமைப்பு (AMI) திட்டம் போன்ற திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • AIF இன் கீழ், PACS சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான கடன்களுக்கு வட்டி மானியத்தைப் பெறுகிறது.
  • AMI இன் கீழ் PACS-களுக்கான மானியம் 33.33% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பரவலாக்கப்பட்ட சேமிப்பு வசதிகள் மூலம் விவசாயிகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதும், விற்பனையில் ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்